Sunday, February 26, 2017

ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 8
ரத்னகிரியில் இருந்து உதயகிரிக்கு கிளம்பினோம். பஸ் நின்ற இடத்தில் இருந்து மலையை நோக்கி ஒருகிலோ மீட்டருக்கு நடந்தோம்.
கண்களில் விரிந்த காட்சி அற்புதம். வெய்யில் குறைந்த மாலை நேர வானம் ஒளிர பச்சை மலை பின்னணியில் உதயகிரி புத்தத்தின் எச்சங்கள்.
சின்னதாய் ஒரு புத்தனுக்கு ஒரு கோவில். வெளிப்பக்கங்களில் அழகிய சிலைகள்.
ஒரு நாள் கழிந்தது.
மறுநாள் ராஜாராணி கோவில். அற்புதமான சிலைகள். என்னிடம் நல்ல கேமிரா இருந்தும், அதை ஏன் சுமக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்டு போகவில்லை. அதை விட பெரிய பிரச்சனை, எதை எடுக்க எதைவிட, அவ்வளவு இருக்கிறது. கண்களால் பார்ப்பதே போதும்>
மிக மிக அழகான சிலைகள் பார்க்க,@ Tamil Heritage Trust பக்கத்துக்கு போகவும்.
அங்கிருந்து Bhaskaresvara கோவிலுக்கு போனோம். ASI கீழ் வருவதால் பிரமாண்ட புல் வெளி, பூக்கள் என்று இருந்தது. மற்றப்படி கோவிலில் என்ன பார்த்தேன் என்று நினைவில்லை.
அடுத்து Satrughneswara கோவில்.
கோவில்களை பற்றிய முழுவதுமான விவரங்கள் நான் தரவில்லை. காரணம் நான் செய்த தவறு சிலபடங்கள் எடுத்து, செல் போனில் சின்னதாய் குறிப்பு எழுதிக் கொண்டது போறவில்லை.
அடுத்த முறை இப்படி சென்றால், ப்ரிபேரேஷன் டாக் நடக்கும்பொழுதே, சின்னதாய் நோட் புக் போட்டுக்கொண்டு ஒரு பக்கம் அவர்கள் சொல்வதை எழுதிக்கொண்டு, மறுபக்கம் பார்க்கும் பொழுது நோட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பார்க்கலாம் அடுத்த விசிட் பொழுது இன் ஷா அல்லா :-)
அடுத்து மியூசியம் பார்க்க கிளம்பும்பொழுது நான் ஷாப்பிங் செய்ய, மியூசியமை சாய்ஸ்ஸில் விட்டு விட்டேன்.
மகள் ikat ஓரிசா புகழ் கைத்தறி வாங்கி வர சொன்னாள். பொதுவாய் அவள் எதுவும் கேட்கிற டைப் இல்லை.
மிக அருமையான, அப்படி நைஸ் ஹேண்ட் லூம் மெட்டிரீயல் பார்த்ததேயில்லை. மூணு டாப்ஸ்க்கு மட்டும் துணி எடுத்தேன்.
அப்படியே பார்த்துக்கொண்டு வரும்பொழுது, பட்ட சித்ரா புடவை என்று சொல்லிக்கொண்டு இருந்ததைப் பார்த்து அப்படியே நின்று விட்டேன்.
பட்டு கட்டாத / வாங்காத பாலிசியை சீட்டிங் செய்துவிட்டு, டஸ்ஸர் சில்க் என்று சொன்னதையும் கேட்டுக்கொண்டு< பட்ட சித்ரா என்ற வார்த்தைக்கு மயங்கி வாங்கியே விட்டேன்.
தங்கியிருந்த ஹோட்டல் ரிசப்ஷனியும் அது பட்ட சித்ரா என்றாலும் இல்லைன்னு டாங்க.
போகட்டும், 'உங்களுக்கு நல்லா இருக்கும்" என்ற உத்திரவாதம் தரப்பட்டதால் மனதைத் தேற்றிக்கொண்டேன்.
லஞ்சு முடிந்து கண்டகிரி, உதயகிரி ( வேறு ஒன்று) கிளம்பினோம்.
படங்கள்
1- உதயகிரி,
2- ஊஞ்சல் ஆடும் சிறுவன் அ சிறுமி- விரல்களைப் பாருங்கள்.
3-பச்சை மலை பேக்ரவுண்டில் அழகிய கோவில்
4- ராஜா ராணி கோவில் வாசலில் "ராணி ":-)
5- பட்ட சித்ரா புடைவை
6- ராஜாராணி கோவிலில் எருமை வாகனத்தில் எமன்

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்