Sunday, February 05, 2017

ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 5
அடுத்து போனது வைத்துல்தேவுலா  கோவில். இப்பத்தானே தலைவலி ஆரம்பித்திருக்கிறது, இந்த கோவில் சிறியது என்றாலும் சிலைகள் அற்புதம்.மகிஷாமர்த்தினி சொல்ல வார்த்தையில்லை. அப்படியே சதக்குன்னு ஒரு போடு போடுகிறாள். வராகரும் அற்புதம், விரல்களை பாருங்கள்.
அவ்வளவு தான் அடுத்த 24 மணிநேரங்கள் முழுக்க பிளாக் அவுட். லிஸ்டில் இருந்து என்ன என்ன பார்த்தோம் என்று எடுத்துப் போட்டிருக்கேன்.:-)
மேடும் பள்ளமுமாய் குப்பை மெட்டில் ஏதோ பார்த்த நினைவு. கொஞ்சம் பெயின் கில்லர் புண்ணியத்தில் அடுத்துப் பார்த்தது பரசு ராமேஸ்வர் கோவி
இங்கு பூஜை நடைப் பெற்றுக்கொண்டு இருந்தது.
படு சோகத்துடன் என்ன செய்வது மேற்கொண்டு என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.
அங்கிருந்து லஞ்சுக்கு போனோம், என்ன சாப்பிட்டேன் என்றே நினைவில்லை.
அங்கிருந்து கிளம்பி Chausathi yogini ,சித்தேஸ்வரர் , முக்தேஸ்வரர் பிரம்மேஸ்வரர் கோவில்களுக்கு போனோம், சுத்தம் ;-)
ஆனால் கடைசியாய் பார்த்த முக்தேஸ்வரர் கோவிலின் அழகில் தலைவலி குறைந்தது.
ஒன்று மட்டும் தெளிவானது, புவனேஸ்வரர் மட்டும் பார்க்க, ஒரு வாரமாவது வேண்டும், அழகழகான சிலைகள்.
கிளம்பும்பொழுது கொடுக்கப்பட்ட செல்லும் இடங்களை குறித்த கைடு , பஸ்ஸில் தந்த சின்ன லெக்சர், வாட்ஸ் அப்பில் எங்கே போகிறோம் என்ற குறிப்புகள், சம்மந்தப்பட்ட இடங்களில் தரப்படும் அருமையான லெக்சர். ஆத்மார்த்தமாய் செயல் பட்ட தமிழ் பாரம்பரிய குழுவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!
இரவு ஏதோ சாப்பிட்டு விட்டு படுத்தால்,கண்களை மூடினால் சிலை சிலையாய் ஓடியது.
அலைந்த அலைச்சலில் ஐந்தே நிமிடத்தில் நல்ல உறக்கம்
படங்கள்.
மகிஷார்சுர மர்த்தினி, வராகர், யோகினி ( ஹேர் ஸ்டைல் பாருங்க, அறுபத்தி நாலு யோகினிகள், வேற வேற ஹேர் ஸ்டைலில்), முக்தேஸ்வரர் கோவில் தோரண வாயில், உள்ளே சீலிங்

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்