Sunday, February 05, 2017

ஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல்- 4
26-1- 2017 இன்று தான் சரியான பயணம் ஆரம்பிக்கிறது.
எங்கெங்கு போக போகிறோம் என்ற பட்டியல் வந்து விட்டது. இன்னும் தலைவலி ஆரம்பிக்கவில்லை ;-)
முதலில் பிந்துசாகர் குளத்தைச் சுற்றி நிறைய கோவில்கள்.
முதலில் போனது தாளேஸ்வரர். சின்ன கோவில் . பூஜை இருந்தது. இருந்த சிற்பங்கள் அழகு.
அடுத்து உத்தரேஸ்வரா.இங்கு பூஜை இருப்பதுப் போல் தெரியவில்லை.
அப்படியே வெளியே வந்து புவனேஸ்வரில் இருக்கும் ஓரே பெருமாள் கோவிலான அனந்த வாசுதேவா க்கு சென்றோம்.
மிக அழகான கோவிலை எவ்வளவு முடியுமா அவ்வளவு நாஸ்தி ஆக்கிக்கொண்டு இருந்தார்கள்.
பிரகாரத்தின் ஒரு பக்கம் முழுக்க ' மகா பிரசாதம்" தயார் ஆகிக்கொண்டு இருந்தது.
சொத சொதவென்று வழி எல்லாம் தண்ணீர். கட்டைகள், ஈ மொய்க்க திறந்துக்கிடந்த தயாரான உணவு மண் பானைகள். குவியல் குவியலாய் நறுக்கி வைக்கப்பட்ட நாட்டு காய்கறிகள். காய்கறி கழிவுகள்.
அப்படியே கர்ப்பக்கிரகத்துக்கு சென்றோம்.
இந்தியாவிலேயே மகா பிரசாதம் தயாரிக்கும் இடங்கள் மூன்று ஒன்று பூரி, அடுத்து இங்கே பிறகு திருப்பதி என்றார்.
நாங்கள் தென் இந்தியாவில் இருந்து வந்ததை தெரிந்துக்கொண்டு திருப்பதியை சேர்த்துகொண்டார் என்பது என் சந்தேகம் ;-)
உயர்சாதி கீழ் சாதின்னு வித்தியாசம் கோவிலில் கடைப்பிடிக்க படுவதில்லை என்றார். நம்புகிறா மாதிரி இல்லை.
நம் ஊர் பெருமாள் அழகு இல்லை. ஆனால் மூலவரை பார்க்கும் கருடன் அழகாய் இருந்தது.
பூஜை நடக்கும் இடம் என்பதால் படம் எடுக்க அனுமதியில்லை
.
ஆனால் வெளி பிரகாரத்தில் சமையல் நடக்கும் இடத்தை கடந்து சென்றால் அற்புதமான சித்திரங்கள்.
ஆனாலும் ஒரு உன்னதமான இடத்தில் சமையல் செய்கிறேன் என்று நாஸ்தி செய்து வைத்ததை பார்த்து மனம் தாங்கவேயில்லை.
தலைவலி மெல்ல எழ ஆரம்பித்தது.

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்