Friday, September 20, 2013

பப்லூ


நல்ல பிரவுன் நிறம். கருத்த திராட்சைகளாய் விழிகள். நல்ல சுறுசுறுப்பு. கூண்டில் இருந்து எடுத்து சின்ன டப் நீரில் பின்னங்காலை
முக்கினால் அழகாய் நீந்துவதுப் போல கால்களை அசைத்தது. அதுதான் மருத்துவம் என்றார் டாக்டர் அரவிந்த். மல்டிப்பிள் பிராக்சரில்
அடிப்பட்ட பத்துநாள் குட்டி. முதலில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற டாக்டர், இதிலேயே சரியாகிவிடும் என்றார்.

மிக சரியான தருணம், மருத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் உடலும், குட்டியின் சுறுசுறுப்பும் சுமார் ஒரு மாதத்தில் முழுமையாய் சரியானது பப்லூ.

அடுத்து அதை எங்கே விடுவது? பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், தங்கள் தாய் தந்தையர் தனியாய் இருக்கிறார்கள், தனி வீடு. நாய் இருந்தால் நல்லது, நாங்கள் வளர்க்கிறோம் என்றார்கள். ஓரே வாரத்தில் குட்டியை சமாளிக்க முடியவில்லை என்று திரும்ப தந்துவிட்டார்கள்.

முதலிலேயே இரண்டை வைத்துக்கொண்டு பாடுப்பட்டுக்கொண்டு இருந்த நான், மூன்றாவதா என்று பயப்பட்டேன். வாசலில் ஒரு குட்டி பையன், நாய் இருக்கா ஆண்டி,  எனக்கு தாங்க என்றதும், முதலில் வீட்டில் கேட்டுக் கொண்டு வா என்றதும், சிட்டாய் பறந்தது அந்த புள்ளி.

அந்த பையன், பக்கத்தில் இருக்கும் ஆண்களுக்கான விடுதியில் இருக்கிறான் தன் பாட்டியுடன். ஹாஸ்டலில் இருப்பவர்களுக்கும் பப்லூ "பெட்" ஆனதால், சந்தோஷமாய் இருந்தது. ஆனால் ரெண்டாவது நாளே காலையில் பாட்டியுடன், அந்த பையன் அழுதுக்
கொண்டே,   பப்லூவை திருப்பி தந்து, ஹாஸ்டல் உரிமையாளர், இங்கெல்லாம் நாய் வளர்க்க கூடாதுன்னுட்டார் என்றாராம்.

பாவம், அந்த பையன் கண்களை துடைத்துக்கொண்டே போனது.
பப்லூவின் அதீத சுறுசுறுப்பு. அதைக்கண்டாலே ஆகாத "இனி, ஃபூ" இவைகளை மேய்த்துக் கொண்டு என்ன செய்வது என்று நான்
முழித்துக் கொண்டு இருந்தேன். ஏன் இந்த வேண்டாத வேலை என்று என் மகளுக்கு திட்டு. மாத கடைசியில் அடாப்டேஷன் டிரைவ்
இருக்கு, அங்க எடுத்துக்கிட்டு போனால் அதுக்கு ஒரு வீடு கிடைத்துவிடும் என்றாள் என் மகள்.

வீட்டு துணிகளை அயர்ன் செய்யும் பெண், எனக்கு நாய்க்குட்டி தரீங்களாமா? என்றதும், சந்தோஷமாய் தந்தேன். ஆனால் திரும்ப இரண்டு நாளில், ஓரே மழை. எங்க வீடு ஒழுகுது. இதுல நாய் வேறையான்னு என் வீட்டுக்காரர் கோச்சிக்கிராரு. எங்க நாத்தனார் வீட்டுல விட்டு இருக்கோம் என்றாள்.
மிகுந்த கவலையாகிவிட்டது. விஷயத்தை மகளிடம் சொன்னதும், உடனே புறப்பட்டு வந்தாள். வாம்மா! தேடிக்கிட்டு போய் பார்க்கலாம்  என்றாள்.

எனக்கு வீடு தெரியாது. கோவில் கிட்ட என்றாள், போய் பார்க்கலாம் என்றேன்.
அந்த தெருவில் யாரை கேட்பது என்று தெரியாமல், இப்படி அப்படி நடந்தோம். ஒரு வீட்டின் உள்ளே நாய் குலைக்கும் சத்தம்.

உள்ளே தயக்கத்துடன் நுழைந்து, இங்கே பப்லூ  என்ற நாய்க்குட்டி இருக்கா என்றதும், மாடிக்கு வர சொன்னாள் ஒரு பெண்.

நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பது எவ்வளவு உண்மை. எப்படி முகர்ந்துப் பார்த்து நாங்கள் வருவதை கண்டுப்பிடித்திருக்கு?

இப்பொழுது பப்லூ மிக சந்தோஷமாய் புது குடும்பத்தில் சுகமாய், செளகரியமாய் இருக்கு.

சஞ்சய், ராஜீவ் என்று இரண்டு குட்டி பையன்கள். தினமும் வாக்கிங் அழைத்துப் போகிறார்கள். போட வேண்டிய தடுப்பூசுகள்
ஒழுங்காய் போடப்படுகின்றன. குட்டி அழகாய் வளர்ந்துக் கொண்டு இருக்கிறது.

2 பின்னூட்டங்கள்:

At Saturday, 21 September, 2013, சொல்வது...

மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உஷா.

பப்லுவுக்கு நல்லவீடு அமைஞ்சது அதன் அதிர்ஷ்டம்தான்.

பூனைகளுக்கு வீட்டின்மீது பற்றுதல். நாய்களுக்கு எசமான் மேல் பற்றுதல்.

 
At Saturday, 21 September, 2013, சொல்வது...

அப்பாடா, பப்லுவுக்கு இடம் கிடைச்சதே. நிம்மதியா இருக்கு உஷா. சமத்துக்குட்டி.

 

Post a Comment

<< இல்லம்